பாகிஸ்தானில் ஒரே நாளில் 4,896 பேருக்கு கரோனா தொற்று
பாகிஸ்தானில் கரோனா வைரஸ் தொற்றுக்கு ஒரே நாளில் 4.896 பேருக்குப் புதிதாகத் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், அந்த நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 89,249 ஆக உயர்ந்துள்ளது.


பாகிஸ்தானில் கரோனா வைரஸ் தொற்றுக்கு ஒரே நாளில் 4.896 பேருக்குப் புதிதாகத் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், அந்த நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 89,249 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 68 பேர் பலியாகியுள்ளதை அடுத்து, இதுவரை மொத்தம் 1,838 பேர் நோய்த் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர். அதேசமயம் இந்த நோயால் பாதிக்கப்பட்ட 31,198 பேர் குணமடைந்துள்ளனர்.
ஈத் விடுமுறைகள் மற்றும் ஊடரங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர் தொடர்ந்து மூன்றாவது நாளாக பாகிஸ்தானில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
சிந்து மாகாணத்தில் 33,536, பஞ்சாப் 33,144, கைபர்-பக்துன்க்வா 11,890, பலூசிஸ்தான் 5,582, இஸ்லாமாபாத் 3,946, கில்கிட்-பால்டிஸ்தான் 852 மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் 299 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...