இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கரோனா: மும்பையில் இன்று புதிதாக 1150 பேருக்கு பாதிப்பு, 53 பேர் பலி

மும்பையில் இன்று புதிதாக 1150 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

News image
கோப்புப் படம்
Updated On :5 ஜூன் 2020, 4:04 pm

DIN

மும்பையில் இன்று புதிதாக 1150 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,26,770 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் முன்னெப்போதும் இல்லாத வகையில் 9,851 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 273 பேர் பலியாகியுள்ளனர். இத்துடன் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 6348ஆக உயர்ந்துள்ளது.  தற்போது 1,10,960 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

இதுவரை 1,09,462 பேர் குணமடைந்துள்ளனர். நாட்டிலேயே அதிகளவு பாதிப்பு மகாராஷ்டிர மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது. இங்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,436 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 139 பேர் பலியாகியுள்ளனர். மேலும் மாநிலத்தை பொறுத்தவரை ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 80,229 ஆக உள்ளது. இதுவரை 2,849 பேர் பலியாகியுள்ளனர். அதே போல 35,156 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 

அதில் மும்பையில் இன்று புதிதாக புதிதாக 1150 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநகராட்சி தெரிவித்துள்ளது. இத்துடன் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45,854ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் இன்று கரோனாவுக்கு மேலும் 53 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 1518ஆக உயர்ந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.