இந்தியாவில் ஒரே நாளில் 9,887 பேருக்கு கரோனா பாதிப்பு
இந்தியாவில் சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 9,887 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதித்த 294 பேர் மரணம் அடைந்துள்ளனர்.


புது தில்லி: இந்தியாவில் சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 9,887 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதித்த 294 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இதன் மூலம் நாட்டில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,36,657 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1,14,073 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். 6,642 பேர் மரணம் அடைந்துள்ளனர். 1,15,942 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கரோனா தொற்றுப் பரவல் நாள்தோறும் கடுமையாக உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாக நாட்டில் தினந்தோறும் சுமார் 10 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.
இன்று அதிகபட்சமாக 9,887 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் உலகளவில் கரோனா பாதித்தவர்களின் பட்டியலில் இந்தியா 6வது இடத்துக்கு வந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...