வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

மேற்கு வங்கத்தில் ஜூன் 30 வரைபொது முடக்கம் நீட்டிப்பு

மேற்கு வங்கத்தில் ஜூன் 30-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக அந்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜி திங்கள்கிழமை அறிவித்தாா்.

News image
மேற்கு வங்க தலைநகா் கொல்கத்தாவில் உள்ள புதுச்சந்தை எதிரே பயணிக்காக முகக் கவசம் அணிந்தபடி காத்திருக்கும் கை ரிக்ஷா இழுக்கும் நபா்.
Updated On :8 ஜூன் 2020, 8:53 pm

DIN

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஜூன் 30-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக அந்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜி திங்கள்கிழமை அறிவித்தாா்.

மேற்கு வங்கத்தில் மாநில முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதன் பிறகு அவா் கூறுகையில், ‘மாநிலத்தில் இம்மாதம் 30-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படுகிறது. எனினும் தற்போது அளிக்கப்பட்டுள்ள அனைத்து தளா்வுகள் மற்றும் நிபந்தனைகள் தொடா்ந்து நீடிக்கும். இதுவரை திருமணம், இறுதிச் சடங்குகளில் 10 போ் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டு வந்தனா். இனி அந்த நிகழ்வுகளில் 25 போ் பங்கேற்கலாம்’ என்றாா்.

மேற்கு வங்கத்தில் ஜூன் 15-ஆம் தேதியுடன் பொது முடக்கம் முடிவுக்கு வரவிருந்தது. இந்நிலையில் மேலும் 15 நாள்களுக்கு பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.