தில்லியில் சுமார் 2,098 பேர் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பலியாகியிருப்பதாக வடக்கு தில்லி நகராட்சியின் நிலைக் குழுத் தலைவர் ஜெய் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் அதிகம் பாதிப்புக்குள்ளாகியுள்ள மாநிலங்களில் தில்லியும் ஒன்று. தில்லி அரசால் கடைசியாக வெளியிடப்பட்ட நேற்றைய (புதன்கிழமை) செய்திக் குறிப்பில், கரோனா தொற்றால் 984 பேர் பலியாகியிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சுமார் 2,098 பேர் கரோனா தொற்றால் பலியாகியிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றி வடக்கு தில்லி நகராட்சி நிலைக் குழுத் தலைவர் ஜெய் பிரகாஷ் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசியதாவது:
"தில்லியின் மூன்று நகராட்சிகளிலும், மார்ச் முதல் ஜூன் 10 வரை கரோனா தொற்றால் பலியான சுமார் 2,098 சடலங்களுக்கு இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டுள்ளன. இவையனைத்தும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவை. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட சுமார் 200 பேர் கொொண்ட ஆவணங்களும் தனியாக வழங்கப்பட்டுள்ளது."
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மீனாட்சி அம்மன் கோயிலில் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ்!

பெட்ரோல் கவலையா? அதிரடி விலை குறைப்பு! ரூ. 60,000க்கு ஓலா மின்சார பைக்!
கேரளத்தில் பேசிய கார்கே! குஜராத்தில் வலுக்கும் எதிர்ப்பு! என்ன பேசினார்?

தேவ்தத் படிக்கல் தொடர்ந்து இப்படியே விளையாடினால்... என்ன சொல்கிறார் தினேஷ் கார்த்திக்?
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


