18 நாள்கள் வென்டிலேட்டரில்... கரோனாவை வென்ற 4 மாதக் குழந்தை

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த நான்கு மாதக் குழந்தைக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அதன் உடல்நிலை மோசமடைந்தது.
18 நாள்கள் வென்டிலேட்டரில்... கரோனாவை வென்ற 4 மாதக் குழந்தை


ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த நான்கு மாதக் குழந்தைக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அதன் உடல்நிலை மோசமடைந்து, 18 நாள்கள் வென்டிலேட்டர் உதவியோடு சிகிச்சை பெற்று, தற்போது கரோனாவில் இருந்து மீண்டுள்ளது.

விசாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் வினய் சந்த் இது பற்றி கூறுகையில், குழந்தையின் உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை பூரண குணம் அடைந்து விட்டதாகக் கூறி வெள்ளிக்கிழமை மாலை குழந்தை விசாகா மருத்துவ அறிவியல் மைய மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாகக் கூறியுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், கிழக்குக் கோதாவரி பகுதியைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் லஷ்மிக்கு கரோனா பாதிப்பு கடந்த மே மாதத்தில் உறுதி செய்யப்பட்டது. பின்னர், அவரது 4 மாதக் குழந்தைக்கும் கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

உடனடியாக குழந்தை மே 25ம் தேதி விசாகப்பட்டினம் விஐஎம்எஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அங்கு அதன் உடல்நிலை மோசமடைந்த போது, 18 நாள்கள் குழந்தைக்கு வென்டிலேட்டர் உதவியோடு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை முடிந்து குழந்தைக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது, அதில் குழந்தைக்கு கரோனா இல்லை என்பது உறதி செய்யப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

விசாகப்பட்டினத்தில் வெள்ளிக்கிழமை மட்டும் புதிதாக 14 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  இதன் மூலம் அங்கு கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 252 ஆக உயர்ந்தது. இதுவரை ஒருவர் பலியாகியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com