உ.பி.யில் 14 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்

உத்தரப் பிரதேசத்தில் 14 ஐபிஎஸ் அதிகாரிகளுக்குப் பணி இடமாற்றம் செய்து அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 
உ.பி.யில் 14 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்
Updated on
1 min read

உத்தரப் பிரதேசத்தில் 14 ஐபிஎஸ் அதிகாரிகளுக்குப் பணியிடமாற்றம் செய்து அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 

இதுகுறித்து உ.பி அரசு வெளியிட்டுள்ள அறிக்கை..

திங்கள்கிழமை இரவு ஐ.பி.எஸ். அதிகாரிகள் 14 பேருக்கு  பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கான்பூர், பிலிபிட், சீதாபூர், ஷாஜகான்பூர், சஹாரான்பூர், பிரயாகராஜ், ஹத்ராஸ், உன்னாவ் மற்றும் பாக்பத் மாவட்டங்களின் காவல்துறை  தலைவர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

கான்பூரின் மூத்த காவல் கண்காணிப்பாளர் (எஸ்.எஸ்.பி) அனந்த் தேவ் திவாரி பதவி உயர்வு பெற்று துணை ஆய்வாளர் (டி.ஐ.ஜி) எஸ்.டி.எஃப் மாற்றப்பட்டுள்ளார். 

தினேஷ்குமார் கான்பூரில் எஸ்எஸ்பி.யாகவும், எஸ்.சனப்பாவை சஹரன்பூர் எஸ்.எஸ்.பி.யாகவும் மற்றும் ஜெய் பிரகாஷ் யாதவ் பிலிபிட் எஸ்.பி.யாகவும் நியமிக்கப்பட்டனர்.

பிரயாகராஜின் எஸ்.எஸ்.பி சத்யார்த்த் அனிருத் பங்கஜ் காத்திருப்பு பட்டியலில் உள்ளார். 69,000 ஆசிரியர்களை நியமிப்பதில் ஏற்பட்ட மோசடியை அவர் சமீபத்தில் அம்பலப்படுத்தியுள்ளார். 

அபிஷேக் தீட்சித் பிரயாகராஜின் எஸ்.எஸ்.பி.யாக பொறுப்பேற்கவுள்ளார். எஸ்.ஆனந்த் ஷாஜகான்பூர் எஸ்.பி.யாகவும், சீதாப்பூரின் எஸ்.பி.யாக ஆர்.பி.சிங், எல்.ஆர். குமார் லக்னோ காவல் விஜிலென்ஸ் துறையில் துணை ஆய்வாளர் ஆகவும், விக்ராந்த் வீர் ஹத்ராஸின் எஸ்.பி.யாகவும்,  கௌரவ் பன்ஸ்வா லக்னோவின் குற்றத் தலைமையக இயக்குநரகத்தில்  காவல்துறை கண்காணிப்பாளராக உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com