
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நேற்றிரவு ஏற்பட்ட மோதலில் இந்தியத் தரப்பில் 20 பேர் வீர மரணமடைந்ததாக இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
லடாக்கில் சண்டை நடந்த கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியிலிருந்து இரு தரப்பு ராணுவத்தினரும் விலகிவிட்டதாகவும் தற்போது நிலைமை அமைதியாக இருப்பதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்திருப்பதாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எல்லைப் பாதுகாப்பையும் நாட்டின் இறையாண்மையும் காப்பதில் உறுதியாக இருப்பதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, எல்லைப் பகுதியில் சீன ஹெலிகாப்டர்களின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இந்திய ராணுவத்துடனான சண்டையில் இறந்தவர்களின் உடல்களையும் காயமுற்றவர்களையும் கொண்டுசெல்லும் பணியில் இவை ஈடுபட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
விரைவில் உயிரிழந்தவர்கள் பற்றிய விவரங்கள் ராணுவத் தரப்பில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.