கமேனி உயிரிழப்பு: ஈரான் ஊடகம் அதிகாரபூர்வ அறிவிப்புகமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்: பொதுமக்கள் 4 பேர் காயம்

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்தியல் 4 பொதுமக்கள் காயமடைந்தனர். 

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:49 pm

DIN

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்தியல் 4 பொதுமக்கள் காயமடைந்தனர். 

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதிகளில் உள்ள இந்திய ராணுவ நிலைகள், கிராமங்களை குறிவைத்து, பாகிஸ்தான் ராணுவத்தினா் அத்துமீறி தாக்குதல் நடத்துவது கடந்த சில தினங்களாக அதிகரித்துள்ளது. 

இந்த நிலையில் பாரமுல்லா மாவட்டத்தின் ராம்பூர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டிய பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் இன்று காலை அத்துமீறித் தாக்குதல் நடத்தியது.

சிறிய ரக ஆயுதங்கள், மோட்டாா் குண்டுகளைப் பயன்படுத்தி இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு, இந்திய தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. எனினும், இந்த மோதலில் 4 பொதுமக்கள் காயமடைந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.