மிசோரமில் கடந்த ஞாயிறு, திங்கள் கிழமைகளில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்ட நிலையில், இன்று காலை 8 மணியளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
மிசோரம் மாநிலத்தில் இன்று காலை 8.02 மணியளவில் 31 கி.மீ. தெற்கு - தென் மேற்கே சாம்பாய் பகுதியில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1 ஆகப் பதிவாகியுள்ளது.
மிசோராமில் கடந்த ஞாயிறு மாலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியிருந்தது. இதுதொடர்பாக தேசிய புவியியல் ஆராய்ச்சி மையம் வெளியிட்ட தகவலில், ‘தலைநகர் ஐசாவலில் இருந்து 25 கிலோமீட்டர் கிழக்கு – வடகிழக்கு திசையில், ஞாயிறு மாலை 4.16 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டது. இந்த அதிர்வானது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியிருந்தது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து, திங்கள்கிழமை அதிகாலை 4.10 மணிக்கு தொடர்ந்து இரண்டாம் முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.5 எனப் பதிவாகியிருந்தது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒன்றரை வயது குழந்தை மயங்கி விழுந்து உயிரிழப்பு! போலீஸாா் விசாரணை!

இஸ்ரேலில் வேலை வாங்கித் தருவதாக 100-க்கும் அதிகமானோரிடம் பணமோசடி! கோவையைச் சோ்ந்த நிறுவனம் மீது புகாா்

சிலிண்டா் தட்டுப்பாடால் ஜாப் ஆா்டா் தொழில் முடக்கம்! நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு கோரிக்கை!

மளிகைக் கடை, சுற்றுச்சுவா் இடிக்கப்பட்ட விவகாரம்: பெண் உள்ளிட்ட 7 போ் மீது வழக்கு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


