பேஸ்புக்கில் பிரபல முன்னணி நிறுவனங்கள் பல தங்களது விளம்பரத்தை நிறுத்தியுள்ளதால் பேஸ்புக் ரூ.54,000 கோடி(7.2 பில்லியன் டாலர்) மதிப்பிலான விளம்பரங்களை இழந்து சரிவை சந்தித்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் இனவெறி, வன்முறையைத் தூண்டும் விளம்பரங்களுக்கு எதிராக பிரபல முன்னணி நிறுவனங்கள் குரல் கொடுத்து வருகின்றன. அந்நிறுவனங்கள் பேஸ்புக்கில் தங்களது விளம்பரங்களை குறைத்துள்ளதுடன் சமூக வலைதளத்தில் #StopHateForProfit என்ற ஹேஷ்டேக்கில் இனவெறி, வன்முறையைத் தூண்டும் பதிவுகளுக்கு எதிராக கருத்து பதிவிட்டு வருகின்றன. மேலும் பல தவறான தகவல்கள் பேஸ்புக்கில் வருவதாகவும் குறிப்பிட்டுள்ளன. அதன்படி, யுனிலீவர், கோகோ- கோலா, வெரிசான், பென் & ஜெர்ரி உள்ளிட்ட நிறுவனங்கள் பேஸ்புக்கில் தங்களது விளம்பரத்தை நிறுத்தியுள்ளன.
இதனால், பேஸ்புக் நிறுவனம் ரூ.54,000 கோடி(7.2 பில்லியன் டாலர்) மதிப்பிலான விளம்பரங்களை இழந்து சரிவை சந்தித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று மட்டும் 8.3% சரிவை பேஸ்புக் நிறுவனம் சந்தித்துள்ளது.
இதனால் 82.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்பைக் கொண்டுள்ள பேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் உலக பணக்காரர்கள் பட்டியலில் 3 ஆம் இடத்தில் இருந்து 4 ஆம் இடத்துக்குச் சென்றுள்ளார்.
இதுகுறித்து மார்க் ஜூக்கர்பெர்க் கூறுகையில், 'நிறவெறி, வன்முறையைத் தூண்டும் கருத்துகளுக்கு பேஸ்புக்கில் இடமளிக்கப்படாது. போலி கணக்குகளில் இருந்து இதுபோன்ற கருத்துகளைப் பதிவிடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தவறான தகவல்கள் அனைத்தும் நீக்கப்படும். அனைவருமே ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள்தான் கருத்து பதிவிட முடியும். அரசியல் தலைவர்களுக்கும் இது பொருந்தும்' என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எம்.ஆர். விஜயபாஸ்கர் சரணடைய அவகாசம்

எவ்வளவு கண்டித்தாலும் போதாது! ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்! ராஜ்நாத் சிங்

மரண நாடகம்! உ.பி.யில் ஆதரவற்ற முதியவரை உயிருடன் எரித்துக் கொன்ற முன்னாள் காவலர்!

மக்களவையில் 16 என்ற எண்ணைக் குறிப்பிட்டு புதிர் போட்ட ராகுல்! விடை என்ன?
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


