தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக டி.கே.சிவகுமார் நியமனம்!

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக டி.கே.சிவகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். 

News image
கோப்புப்படம்
Updated On :11 மார்ச் 2020, 11:32 am

DIN

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக டி.கே.சிவகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். 

கர்நாடகத்தில் சமீபத்தில் 15 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடந்து முடிந்தது. இதில், காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதையடுத்து, இடைத்தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த தினேஷ் குண்டுராவ் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதேபோன்று, எதிர்கட்சித் தலைவர் மற்றும் சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் பதவிகளை சித்தராமையா ராஜினாமா செய்தார். 

தொடர்ந்து, கடந்த 2 மாதங்களுக்கு மேலாக கர்நாடகத்துக்கு தலைவரை நியமிக்காத காங்கிரஸ், இன்று காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவகுமாரை நியமித்து உத்தரவிட்டுள்ளது. 

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக டி.கே.சிவகுமார் நியமிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

அத்துடன், செயல் தலைவர்களாக ஈஷ்வர் காண்ட்ரே, சதீஷ் ஜர்கிஹோலி, சலீம் அகமது ஆகிய மூவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதேபோன்று, காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ அனில் சவுத்ரி தில்லி காங்கிரஸ் தலைவராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.