கேளரத்தில் கரோனா பாதிப்பு 165ஆக உயர்வு

கேளரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 165ஆக உயர்ந்துள்ளது. 
கேளரத்தில் கரோனா பாதிப்பு 165ஆக உயர்வு

கேளரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 165ஆக உயர்ந்துள்ளது. 

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா நோய்த்தொற்று தற்போது இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. கரோனாவின் தாக்கத்தால் முன்னெப்போதும் இல்லாத இக்கட்டான சூழலை இந்தியா எதிா்கொண்டுள்ளது. கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைத்து கடைகளும், பேருந்து, ரயில் போக்குவரத்து அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கேரளத்தில் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் இங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 165ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் இந்தியாவில் கரோனாவுக்கு இதுவரை 909 பாதிக்கப்பட்ட நிலையில் 19 பேர் பலியாகியுள்ளனர். இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது, கேரளத்தில் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 2 பேர்கள், கொல்லம், மலப்புரம், காசராகோடு மற்றும் பாலக்காடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தலா ஒருவர் என 6 பேர் கரேனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்துடன் மொத்தம் 165 பேர் கரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு ஆன்லைன் மூலம் விரைவில் ஆலோசனை வழங்கப்படும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com