ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

தெலங்கானாவில் கரோனாவுக்கு முதல் பலி 

தெலங்கானாவில் கரோனாவுக்கு முதல் பலி ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் மொத்தம் 65 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

News image
Updated On :28 மார்ச் 2020, 2:57 pm

DIN

தெலங்கானாவில் கரோனாவுக்கு முதல் பலி ஏற்பட்டுள்ளது. 

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா நோய்த்தொற்று தற்போது இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. கரோனாவின் தாக்கத்தால் முன்னெப்போதும் இல்லாத இக்கட்டான சூழலை இந்தியா எதிா்கொண்டுள்ளது. இந்த நிலையில் தெலங்கானாவில் கரோனாவுக்கு முதல் பலி ஏற்பட்டுள்ளது. 

இதுகுறித்து அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் எல்டெலா ராஜேந்தர கூறுகையில், தெலங்கானாவில் கரோனாவுக்கு முதல் நபர் பலியானார். இன்று மட்டும் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் மாநிலத்தில் மொத்தம் 65 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் ஒருவர் குணமடைந்தார் என்றார். இதனிடையே இந்தியாவில் கரோனாவுக்கு இதுவரை 918 பாதிக்கப்பட்ட நிலையில் 19 பேர் பலியாகியுள்ளனர். 80 பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.