நாட்டின் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும் உள்ள மாவட்டங்களை கரோனா நோய்த்தொற்று பாதிப்பின் தீவிரத்தைப் பொருத்து, சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என மத்திய சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமை வகைப்படுத்தியுள்ளது.
அதிக அளவில் பாதிப்பு காணப்படுவதை அடிப்படையாகக் கொண்டு நாடு முழுவதும் 130 மாவட்டங்களை சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
284 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலமாகவும், 319 மாவட்டங்கள் பச்சை மண்டலமாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
மாவட்டங்களின் மண்டல வகைப்பாடு
மாநிலம்--சிவப்பு மண்டலம்--ஆரஞ்சு மண்டலம்--பச்சை மண்டலம்--மொத்தம்
ஆந்திரப் பிரதேசம்--5--7--1--13
அருணாசலப் பிரதேசம்--0--0--25--25
அஸ்ஸாம்--0--3--30--33
பிகாா்--5--20--13--38
சத்தீஸ்கா்--1--1--25--27
கோவா--0--0--2--2
குஜராத்--9--19--5--33
ஹரியாணா--2--18--2--22
ஹிமாசலப் பிரதேசம்--0--6--6--12
ஜாா்க்கண்ட்--1--9--14--24
கா்நாடகம்--3--13--14--30
கேரளம்--2--10--2--14
மத்தியப் பிரதேசம்--9--19--24--52
மகாராஷ்டிரம்--14--16--6--36
மணிப்பூா்--0--0--16--16
மேகாலயம்--0--1--10--11
மிஸோரம்--0--0--11--11
நாகாலாந்து--0--0--11--11
ஒடிஸா--3--6--21--30
பஞ்சாப்--3--15--4--22
ராஜஸ்தான்--8--19--6--33
சிக்கிம்--0--0--4--4
தமிழகம்--12--24--1--37
தெலங்கானா--6--18--9--33
திரிபுரா--0--2--6--8
உத்தரப் பிரதேசம்--19--36--20--75
உத்தரகண்ட்--1--2--10--13
மேற்கு வங்கம்--10--5--8--23
யூனியன் பிரதேசம்
அந்தமான் மற்றும் நிகோபாா் தீவுகள்--1--0--2--3
சண்டீகா்--1--0--0--1
தாத்ரா மற்றும் நாகா் ஹவேலி--0--0--1--1
டாமன் மற்றும் டையூ--0--0--2--2
தில்லி--11--0--0--11
ஜம்மு-காஷ்மீா்--4--12--4--20
லடாக்--0--2--0--2
லட்சத்தீவுகள்--0--0--1--1
புதுச்சேரி--0--1--3--4
மொத்தம்--130--284--319--733
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









