வெளிமாநில தொழிலாளர்களின் ரயில் கட்டணச் செலவை காங்கிரஸ் ஏற்கும்: சோனியா
வெளிமாநிலங்களில் தங்கியிருக்கும் புலம்பெயர் தொழிலாளர்களின் ரயில் கட்டணச் செலவை காங்கிரஸ் கட்சியே ஏற்கும் என்று அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா தெரிவித்துள்ளார்.


புது தில்லி: வெளிமாநிலங்களில் தங்கியிருக்கும் புலம்பெயர் தொழிலாளர்களின் ரயில் கட்டணச் செலவை காங்கிரஸ் கட்சியே ஏற்கும் என்று அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு உத்தரவு காரணமாக நாடு முழுவதும் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா எழுதியிருக்கும் கடிதத்தில், சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாமல் தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஆகும் செலவை அந்தந்த மாநில காங்கிரஸ் கட்சியே ஏற்கும் என்று தெரிவித்துள்ளார். நமது தொழிலாளர்களே, நாட்டின் வளர்ச்சிக்குக் காரணமானவர்கள்.
வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை சிறப்பு விமானம் மூலம் இலவசமாக தாயகம் அழைத்து வருவதும், அவர்களது போக்குவரத்து மற்றும் உணவுத் தேவைக்கு இந்திய அரசு ரூ.100 கோடிகளை செலவிடுவதும், பிரதமரின் கரோனா நிதிக்காக ரயில்வே அமைச்சகம் ரூ.151 கோடியை நன்கொடை அளிக்கும் இந்த நேரத்தில், புலம்பெயர் தொழிலாளர்களை இலவசமாக சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்வது மத்திய அரசின் கடமையாகாதா? இதுபோன்ற நெருக்கடியான நேரத்திலும், அவர்களிடம் ரயில் கட்டணம் வசூலிக்காமல் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல முடியாதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து இது குறித்து மத்திய அரசையும், ரயில்வே துறையையும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வந்தாலும், அது நிராகரிக்கப்பட்டு வருகிறது.
எனவே, காங்கிரஸ் கட்சியே இது குறித்து ஒரு முடிவை எடுத்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு மாநில காங்கிரஸ் கட்சியும், அந்த மாநிலத்தில் தவித்து வரும் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்லத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. இதுவே, நாட்டு மக்கள் சொல்லொணாத் துயரத்தில் சிக்கித் தவிக்கும் போது காங்கிரஸ் கட்சி அவர்களுக்கு செய்யும் மிகச்சிறிய உதவியாக இருக்கும் என்றும் சோனியா வலியுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...