ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

குவைத்தில் இந்திய பல் மருத்துவர் கரோனாவுக்கு பலி

குவைத்தில் இந்திய பல் மருத்துவர் கரோனாவுக்கு பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

News image
கோப்புப் படம்
Updated On :10 மே 2020, 4:00 pm

DIN

குவைத்தில் இந்திய பல் மருத்துவர் கரோனாவுக்கு பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

குவைத்தில் பல் மருத்துவராக கடந்த 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தவர் வாசுதேவா(54). இந்தியாரான இவருக்கு அண்மையில் கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் கிகிச்சை பலனின்றி அவர் பலியானார். முன்னதாக அங்கு கடந்த வெள்ளிக்கிழமை எகிப்து நாட்டைச் சேர்ந்த மருத்துவர் தாரிக் ஹூசைன் என்பவர் கரோனாவால் பலியானார். 

தற்போது அவரைத் தொடர்ந்து இந்திய மருத்துவர் ஒருவரும் பலியானதால் குவைத்தில் கரோனாவுக்கு பலியான மருத்துவர்களின் எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.