இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் திட்டமிட்டபடி நடைபெறும்: மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் என்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். 

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:37 pm

DIN

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் என்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். 

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு 3ஆவது முறையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும், நாட்டில் கரோனா வைரஸ பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தற்போது கரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 64 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

மேலும் ஜூன், ஜூலை மாதங்களில் இந்த எண்ணிக்கை உச்சத்தை எட்டும் என்று தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா எச்சரித்துள்ளார். இதனால் நடப்பாண்டிற்கான நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூன் மாதம் தொடங்குமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

இதுகுறித்து மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கூறுகையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் திட்டமிட்டபடி நடைபெறும். தற்போது வரை ஒத்திவைக்கும் திட்டம் எதுவும் இல்லை. எனினும், அந்த நேரத்தில் சூழ்நிலையை பொருத்து முடிவெடுக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.