ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

கரோனா: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 4213 பேர் பாதிப்பு

இந்தியாவில் கரோனாவால் கடந்த 24 மணிநேரத்தில் 4213 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

News image
Updated On :11 மே 2020, 5:19 am

DIN

இந்தியாவில் கரோனாவால் கடந்த 24 மணிநேரத்தில் 4213 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதனால் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு 3ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் இந்தியாவில் கரோனாவால் கடந்த 24 மணிநேரத்தில் 4213 பேர் பதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இத்துடன் நாட்டில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 67,152-ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் பலியானோரின் எண்ணிக்கை 2,109-லிருந்து 2,206-ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 19,452-லிருந்து 20,917-ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.