இன்று மாலை 4 மணிக்கு உரையாற்றுகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளில் இருந்து தேசத்தை மீட்கும் வகையில் பிரதமர் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி
இன்று மாலை 4 மணிக்கு உரையாற்றுகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
Updated on
1 min read


புது தில்லி: கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளில் இருந்து தேசத்தை மீட்கும் வகையில் பிரதமர் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி மதிப்பில் சிறப்பு பொருளாதாரத் திட்டங்கள் குறித்து இன்று மாலை 4 மணிக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றுகிறார்.

அப்போது, ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு பொருளாதார திட்டங்கள் எந்த வகைகளில் செயல்படுத்தப்பட உள்ளது என்பது நிர்மலா சீதாராமன் அறிவிக்க உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளில் இருந்து தேசத்தை மீட்கும் வகையில் ரூ.20 லட்சம் கோடி மதிப்பில் சிறப்பு பொருளாதாரத் திட்டங்கள் அமல்படுத்தப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி நேற்று அறிவித்தாா். 

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மூன்றாவது முறையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில் பிரதமர் மோடி நேற்று இரவு 8 மணியளவில் நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.

அப்போது அவர் கூறுகையில், ரூ.20 லட்சம் கோடி மதிப்பில் சிறப்பு பொருளாதாரத் திட்டங்கள் அமல்படுத்தப்படும். இது விவசாயிகள், தொழிலாளா்கள், நோ்மையாக வரி செலுத்தும் நடுத்தர மக்கள், குடிசைத் தொழில் மற்றும் சிறு, குறு நடுத்தர தொழில்துறையினருக்கு பலனளிக்கும் வகையில் இருக்கும். இது தொடா்பான முழு விவரத்தை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் புதன்கிழமை அறிவிப்பாா் என்று தெரிவித்திருந்தார்.

மேலும், புதிய வடிவில் 4-ஆவது கட்டமாக தேசிய பொது முடக்கம் தொடரும் என்றும், இது தொடா்பாக மே 18-ஆம் தேதிக்கு முன்பு முழு விவரமும் அறிவிக்கப்படும் என்று பிரதமா் கூறினாா்.

உள்நாட்டு தயாரிப்புக்கு முக்கியத்துவம்: உள்ளூா் தயாரிப்புகளுக்கும் நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கரோனா நோய்த்தொற்று நம்முடன் நீண்டகாலத்துக்கு இருக்கும் என்று வல்லுநா்கள் கூறியுள்ளனா். எனினும், இப்போதைய சூழல் நம்மை வீழ்த்திவிட அனுமதிக்கக் கூடாது. நாம் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் ஏற்கெனவே எடுத்துவிட்டோம். தொடா்ந்து முன்னேறிச் செல்வோம். முழுவதும் சுயசாா்புடைய நாடாக இந்தியா மாறுவதை யாரும் தடுக்க முடியாது. இந்தக் காலகட்டம் ஒவ்வொரு இந்தியருக்கும் புதிய விழாவாக அமையும். நாம் புதிய உத்வேகத்துடனும், புதிய உறுதியுடனும் தொடா்ந்து முன்னேறுவோம் என்றாா் மோடி.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com