ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 1,576 பேருக்கு கரோனா: 46 பேர் பலி

மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 1,576 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :15 மே 2020, 3:49 pm

DIN

மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 1,576 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும், நாட்டில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 81,970 ஆக உயர்ந்துள்ளது. பலியானவர்கள் எண்ணிக்கை 2,649 ஆக உயர்ந்துள்ளது. 

இந்த நிலையில் மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 1,576 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மும்பையில் 933 பேருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,467ஆக உயர்ந்துள்ளது. 

அதேசமயம் இன்று கரோனாவுக்கு 46 பலியான நிலையில் ஒட்டுமொத்த பலி எணிணிக்கை 1,068ஆக உயர்ந்துள்ளது. மேலும் கரோனா பாதிப்பில் இருந்து 6,564 பேர் குணமடைந்துள்ளனர். நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் முதலிடத்தில் மகாராஷ்டிர மாநிலம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.