எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

திருமண நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் கூடக் கூடாது: மத்திய அரசு

திருமண நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் கூடக் கூடாது என்றும், கட்டாயம் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

News image
Updated On :17 மே 2020, 3:08 pm

DIN


திருமண நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் கூடக் கூடாது என்றும், கட்டாயம் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமல்படுத்தப்பட்ட 3-ஆம் கட்ட பொது முடக்கம் இன்று நள்ளிரவுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், 4-ஆம் கட்டமாக பொது முடக்கத்தை மே 31 வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இந்த பொது முடக்கக் காலத்தில் மக்கள் கடைப்பிடிக்கப்பட வேண்டியவற்றை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அறிவுறுத்தல்கள்:

  • பொது இடங்கள் மற்றும் பணி இடங்களில் முகக் கவசம் கட்டாயம்
  • பொது இடங்கள் மற்றும் பணி இடங்களில் எச்சில் துப்பினால் அபராதத்துடன் தகுந்த தண்டனை வழங்கப்படும்
  • பொது இடங்களிலும், பயணங்களின்போதும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்
  • திருமண நிகழ்ச்சிகளில் 50-க்கும் மேற்பட்ட நபர்கள் கூடக் கூடாது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்
  • இறுதிச் சடங்குகள் மற்றும் இறுதி ஊர்வலங்களில் 20-க்கும் மேற்பட்ட நபர்கள் கூடக் கூடாது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்
  • மது, பான் மசாலா, குட்கா உள்ளிட்டவற்றை பொது இடங்களில் உட்கொள்ள அனுமதி கிடையாது
  • கடைகளில் 2 நபர்களுக்கிடையே 6 அடி இடைவெளி இருப்பதை உறுதி செய்ய வேண்டும், 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்கக் கூடாது.
     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.