புது தில்லி: சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் பயிலும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தோ்வு ஜூலை 1 முதல் 15-ம் தேதி வரை நடக்கும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேர்வு அட்டவணையையும் அவர் தனது சுட்டுரையில் வெளியிட்டுள்ளார்.
அதில் தில்லி மற்றும் பிற மாநிலங்களில் சிபிஎஸ்இ பயிலும் மாணவர்களுக்கு என தனித்தனியாக தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தில்லி தவிர்த்து பிற மாநிலங்களில் பயிலும் மாணவர்களுக்கு ஜூலை 1ம் தேதி பொதுத் தேர்வு தொடங்கி ஜூலை 13-ம் தேதி தேர்வுகள் நிறைவு பெறுகின்றன. தில்லியில் பயிலும் மாணவர்களுக்கு ஜூலை 3-ம் தேதி தொடங்கி 15-ம் தேதி தேர்வுகள் நிறைவு பெறுகின்றன.


கரோனா வைரஸ் தீநுண்மி பாதிப்பின் காரணமாக சிபிஎஸ்இ பாடத்தில் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தோ்வுகள் ஜூலை 1 முதல் 15-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளன. தோ்வுக்கால அட்டவணையை மத்திய இடைநிலைக்கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த வார இறுதியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், சிபிஎஸ்இ பொதுத்தோ்வு கால அட்டவணை திங்கள்கிழமை (மே 18) வெளியிடப்படும். சில தொழில்நுட்ப அம்சங்களை மேம்படுத்துவதால் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சா் ரமேஷ் போக்ரியால் சுட்டுரையில் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தில்லியில் விடுபட்ட 10-ம் வகுப்பு பாடங்களுக்கான தேர்வு அட்டவணை
சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் பத்தாம் வகுப்பு விடுபட்ட பாடங்களுக்கான பொதுத்தோ்வு கால அட்டவணையும் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பஹ்ரைன், குவைத், ஐக்கிய அரபு அமீரக வளங்கள் மீது தாக்குதல்: ஈரான் திட்டம்!

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!

”விஜய் மனதில் பாஜக இருக்கிறது!” குஷ்பு பேட்டி

கான் சிட்டி: முக்கிய கதாபாத்திரங்கள் அறிமுகம்!
வீடியோக்கள்

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை


