மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

கரோனா பாதிப்பு: ராஜஸ்தான், பிகார், ஒடிசா நிலவரம்

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் இன்று பாதிக்கப்பட்டோர் விவரத்தை ராஜஸ்தான், பிகார் உள்ளிட்ட மாநிலங்களின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது

News image
Updated On :18 மே 2020, 6:07 am

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் இன்று பாதிக்கப்பட்டோர் விவரத்தை ராஜஸ்தான், பிகார் உள்ளிட்ட மாநிலங்களின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இன்று காலை 9 மணி நிலவரப்படி பாதிக்கப்பட்டோர் விவரம்..

பிகார்: 

பிகாரில் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 1,326 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை அங்கு 8 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. சுமார் 475 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். 

ஒடிசா:

ஒடிசாவில் மேலும் 48 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 876 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 652 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 220 பேர் குணமடைந்துள்ளனர். 4 பேர் பலியாகியுள்ளனர்.

ராஜஸ்தான்:

ராஜஸ்தானில் மேலும் 140 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு பாதிப்பு எண்ணிக்கை 5,342 ஆகவும், பலியானோரின் எண்ணிக்கை 133 ஆகவும் உள்ளது. இதுவரை 2,666 பேர் குணமடைந்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.