புது தில்லி: கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,15,364 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.
மேலும், கரோனா பரவத் தொடங்கியதில் இருந்து இதுவரை 28,34,798 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுளள்து என்றும் ஐசிஎம்ஆர் கூறியுள்ளது.
இந்தியாவில் சனிக்கிழமை காலை நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 6,654 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1.25 லட்சமாக உயர்ந்துள்ளது.
அதே சமயம், 24 மணி நேரத்தில் 137 பேர் பலியானதை அடுத்து, நாட்டில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3,720 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 51 ஆயிரம் பேர் குணமடைந்துள்ள நிலையில் 69 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐபோன் 17 வாங்க சிறந்த இணைய விற்பனை தளம் எது? எவ்வளவு தள்ளுபடி?

வங்கதேசத்துக்கான இந்தியாவின் அடுத்த உயர் ஆணையர் யார்?

மே 4 வாக்கு எண்ணிக்கை எப்போது தொடங்கும்? வழிமுறைகள் என்னென்ன?

மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது!
வீடியோக்கள்

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு


