வங்கதேசத்துக்கான இந்தியாவின் அடுத்த உயர் ஆணையராக முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக தலைவருமான தினேஷ் திரிவேதி நியமிக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் திங்கள்கிழமை (ஏப்.27) தெரிவித்துள்ளது.
இந்தியாவும் வங்கதேசமும் பல்வேறு துறைகளில் உறவுகளை வலுப்படுத்தி வரும் சூழலில், தற்போது, இந்தப் பொறுப்பில் உள்ள பிரணய் வர்மா, ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தினேஷ் திரிவேதி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவையில், ரயில்வே அமைச்சராகவும் மத்திய இணை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
2009 முதல் 2019 வரை திரிணமூல் காங்கிரஸ் சார்பில் பராக்பூர் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். பின்னர், 2021 ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.
அமைச்சகத்தின் தகவலின்படி, தினேஷ் திரிவேதி விரைவில் இந்தப் பொறுப்பை ஏற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
The Ministry of External Affairs announced on Monday (April 27) that former Union Minister and BJP leader Dinesh Trivedi has been appointed as India's next High Commissioner to Bangladesh.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
உதயநிதி வேட்புமனு ஏற்பு: ஆவணங்களை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
குண்டர் தடுப்புச் சட்ட ரத்து வழக்கு! உயர் நீதிமன்றத்தில் காத்திருக்கும் முன்னாள் காவல் ஆணையர் அருண்!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 19 புதிய நீதிபதிகள்! கொலிஜியம் ஒப்புதல்!







