மத்தியப் பிரதேசம், பஞ்சாப், மேற்கு வங்கத்தில் பொது முடக்கம் நீட்டிப்பு
மத்தியப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


மத்தியப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட 4-ஆம் கட்ட பொது முடக்கம் நாளை நிறைவடைகிறது. இந்த நிலையில், மத்தியப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசம்:
மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் 10 மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் மத்தியில் காணொலிக் காட்சி வாயிலாக உரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:
"பள்ளிகள் ஜூன் 13-க்குப் பிறகு திறக்கப்படும். ஆனால் இதுபற்றிய இறுதி முடிவு சில நாள்களுக்குப் பிறகுதான் எடுக்கப்படும். ஏனென்றால், ஜூன் 15 வரை பொது முடக்கத்தை நீட்டிக்கவுள்ளோம்."
மேற்கு வங்கம்:
"பொது முடக்கத்தை நிபந்தனைகளுடன் கூடிய கூடுதல் தளர்வுகளுடன் மேலும் இரண்டு வாரங்களுக்கு, அதாவது 15.06.2020 வரை நீட்டிக்க மேற்கு வங்க அரசு முடிவு செய்துள்ளது." என்று அந்த மாநில அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் பொது முடக்கம் நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், மற்ற பகுதிகளில் பல்வேறு நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஓடிடி மற்றும் வெப் போர்டலுக்கான படப்பிடிப்புகள் தவிர்த்து, தொலைக்காட்சி மற்றும் சினிமா படப்பிடிப்புகள் ஜூன் 1-ஆம் தேதி முதல் செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 35 நபர்களை வைத்து மட்டுமே படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பஞ்சாப்:
பஞ்சாபில் மேலும் 4 வாரங்களுக்கு பொது முடக்கத்தை நீட்டிப்பதாக அந்த மாநில முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார். மேலும் தளர்வுகள் பற்றி அறிவித்த அவர், மத்திய அரசின் வழிகாட்டுதல்கள் கவனத்தில் கொள்ளப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...