எனது கருத்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது: சக்திமான் நடிகர் முகேஷ் கண்ணா

​மீ டூ இயக்கம் குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையானதையடுத்து, தனது கருத்து தவறாக சித்தரிக்கப்பட்டுவிட்டதாக சக்திமான் நடிகர் முகேஷ் கண்ணா விளக்கம் அளித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read


மீ டூ இயக்கம் குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையானதையடுத்து, தனது கருத்து தவறாக சித்தரிக்கப்பட்டுவிட்டதாக சக்திமான் நடிகர் முகேஷ் கண்ணா விளக்கம் அளித்துள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"நான் பெண்களை மதிப்பவன். அவர்களது பாதுகாப்பு குறித்து கவலைப்படுபவன். எனது நேர்காணலில் உள்ள குறிப்பிட்ட காட்சிகள் குறித்து சிலர் பிரச்னை எழுப்பியுள்ளனர். பெண்கள் வேலைக்குச் செல்லக் கூடாது என்று நான் ஒருபோதும் கூறவில்லை. அந்த விடியோவில், பெண்கள் வேலைக்குச் செல்லும்போது அவர்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்கள் குறித்து தெரிவித்தேன். ஆனால், பெண்கள் வெளியே சென்றதால், மீ டூ அரங்கேறியதாக நான் கூறவே இல்லை."

முன்னதாக, பெண்கள் வேலைக்குச் செல்வதால்தான் மீ டூ விவகாரம் அரங்கேறியதாக நேர்காணல் ஒன்றில் அவர் தெரிவிப்பதுபோன்ற விடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. இதற்கு கடுமையான விமரிசனங்கள் எழுந்தன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com