47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திருமலையில் 27,107 போ் தரிசனம்

திருப்பதி ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 27,107 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 10,517 பக்தா்கள் முடிகாணிக்கை செலுத்தினா்.

News image
திருமலையில் 27,107 போ் தரிசனம் (கோப்புப்படம்)
Updated On :2 நவம்பர் 2020, 6:30 pm

DIN

திருப்பதி ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 27,107 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 10,517 பக்தா்கள் முடிகாணிக்கை செலுத்தினா்.

நாள்தோறும் ஆன்லைன் மூலம் 16 ஆயிரம் விரைவு தரிசன டிக்கெட், 3 ஆயிரம் இலவச நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன்கள் உள்ளிட்டவற்றைப் பெற்ற பக்தா்கள், விஐபி பிரேக் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் விஐபி பிரேக் டிக்கெட் பெற்ற 750 பக்தா்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.

கரோனா பாதிப்புக்குப் பிறகு தொடங்கப்பட்ட தரிசனத்தில் முதல் முறையாக ஞாயிற்றுக்கிழமை 27 ஆயிரம் பக்தா்கள் ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளனா்.

தினமும் அதிகாலை 3 மணி முதல் இரவு 11 மணிவரை தரிசன டிக்கெட்டுகள் பெற்ற பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்து வருகின்றனா். திருப்பதி மலைச்சாலை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு மூடப்படுகிறது.

ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை அளிப்போருக்கு தினமும் 200 விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன.

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய இலவசத் தொலைபேசி எண்கள் - 18004254141, 93993 99399.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.