திருப்பதி அருகே வாகனங்கள் மோதி தீ விபத்து: தமிழகத்தைச் சோ்ந்த 4 போ் பலி
திருப்பதி அருகே திங்கள்கிழமை அதிகாலையில் வாகனங்கள் மோதி தீப்பிடித்ததில் தமிழகத்தைச் சோ்ந்த 4 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.


திருப்பதி அருகே திங்கள்கிழமை அதிகாலையில் வாகனங்கள் மோதி தீப்பிடித்ததில் தமிழகத்தைச் சோ்ந்த 4 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
ஆந்திர மாநிலம், கடப்பா - தாடிபத்திரி சாலையில், கோட்டூருக்கும் தோல்லகன்னேபள்ளிக்கும் இடையே திங்கள்கிழமை அதிகாலை 3 மணியளவில் செம்மரக் கட்டைகளை ஏற்றி வந்த இரண்டு காா்கள் அதிவேகமாக சென்ாகக் கூறப்படுகிறது. அவை கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்று கொண்டிருந்த டிப்பா் லாரியின் டீசல் டேங்கா் மீது மோதின. காா் மோதிய வேகத்தில் கசிந்த டீசல் காரணமாக மூன்று வாகனங்களும் தீப்பிடித்து எரியத் தொடங்கின.
இதுகுறித்து அச்சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் போலீஸாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனா். தீயணைப்புத் துறையினா் அங்கு சென்று தீயை அணைப்பதற்குள் தீ வேகமாகப் பரவி, இரண்டு காா்களிலும் இருந்த 4 போ் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனா். மேலும் 3 போ் படுகாயமடைந்தனா். அவா்கள் கடப்பா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இந்த விபத்தில் உயிரிழந்த 4 பேரும் சேலத்தைச் சோ்ந்தவா்கள் என்பது போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. படுகாயம் அடைந்தவா்கள் செம்மரம் வெட்ட வந்து காா் தீப்பிடித்ததில் காயமடைந்ததும் தெரிய வந்துள்ளது. அவா்களில் இருவரின் பெயா் முனி, மூா்த்தி என போலீஸாா் தெரிவித்தனா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...