மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஒடிசாவில் மீண்டும் கரோனா அதிகரிக்க வாய்ப்பு: முதல்வர் எச்சரிக்கை

ஒடிசாவில் கரோனா பரவல் இரண்டாவது அலை வீச வாய்ப்புள்ளதாகவும், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் முதல்வர் நவீன் பட்நாயக் எச்சரித்துள்ளார்.

News image
Updated On :7 நவம்பர் 2020, 7:07 am

DIN

ஒடிசாவில் கரோனா பரவல் இரண்டாவது அலை வீச வாய்ப்புள்ளதாகவும், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் முதல்வர் நவீன் பட்நாயக் எச்சரித்துள்ளார்.

அடுத்தடுத்த மாதங்களில் குளிர்காலம் நிலவ உள்ளதால் மக்கள் பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. எனினும் ஒருசில மாநிலங்களில் பரிசோதனைகளை அதிகரித்து தொற்று பரவும் இடங்களைக் கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதால் பல்வேறு மாநிலங்களில் கரோனா பரவல் குறைந்துள்ளது.  எனினும் தில்லி, உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

அந்தவகையில் ஒடிசாவிலும் கரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், மீண்டும் இரண்டாவது அலை வீச வாய்ப்புள்ளதாக முதல்வர் நவீன் பட்நாயக் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது, ஒடிசாவில் வரும் டிசம்பர் மாதம் முதல் கரோனா பரவல் இரண்டாவது அலை வீச வாய்ப்புள்ளது. இதிலிருந்து தற்காத்துக்கொள்ளும் வகையில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் போன்ற வழிகாட்டுதல் நெறிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்தார். 

மேலும், ஊரடங்கு போன்ற சிக்கலில் அகப்படாமல் இருப்பதற்கும் இதுவே சிறந்த வழிமுறை. கேரளம் மற்றும் தில்லி கரோனா பரவலை சுட்டிக்காட்டி பேசிய அவர், கட்டுப்பாடுகளுடன் தீபாவளிப் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். பண்டிகை நாள்களில் கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்த காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று கூறினார். தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 10 முதல் 30-ஆம் தேதி வரை பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.