ஆந்திரத்தில் இரும்பு ஆலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, அதனை அணைக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் செயல்பட்டு வரும் இரும்பு ஆலையில் வியாழக்கிழமையான இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
மூலப்பொருள் கையாளும் பிரிவில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் தீ விபத்து ஏற்பட்டுள்ளதைக் கண்டு தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்தனர்.
உடனடியாக வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக சேதங்கள் தவிர்க்கப்பட்டது. தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இரும்பு ஆலை டர்பைனில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டதே தீ விபத்திற்கு காரணம் என்று ஆலை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஊழியர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாததால் அடுத்த சில நாள்களுக்கு மாற்று வழியில் உற்பத்தி நடைபெறும் என்றும், சேதங்கள் விரைவில் சரிசெய்யப்படும் என்றும் ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஒரே சார்ஜிங்கில் 180 கி.மீ..! ரூ. 99,999-ல் ஓபன் ரோர் பைக்!

ஓய்விலிருந்து கிளாசனை வெளியே கொண்டு வாருங்கள்: கெவின் பீட்டர்சன்

தமிழக கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர், தேர்வுக் குழுவினர் பதவிக்கு ஆட்கள் தேவை!
ம.பி.: சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 16-ஆக உயர்வு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


