இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

உ.பி. காய்கறி சந்தையில் பயங்கர தீ விபத்து 

உத்தரப் பிரதேசத்தின் பிரோசாபாத்தில் காய்கறி சந்தையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல கடைகள் எரிந்து சேதமாகியுள்ளதாக காவல்துறையினர் வியாழக்கிழமை தெரிவித்தனர்.

News image

Fire in UP vegetable market, shops gutted 

Updated On :5 நவம்பர் 2020, 5:49 am

PTI

உத்தரப் பிரதேசத்தின் பிரோசாபாத்தில் காய்கறி சந்தையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல கடைகள் எரிந்து சேதமாகியுள்ளதாக காவல்துறையினர் வியாழக்கிழமை தெரிவித்தனர். 

இன்று அதிகாலை 1:25 மணியளவில் அங்குள்ள கடைகளில் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. உடனனே தீயணைப்புத் துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன.

சுமார் ஏழு மணி நேரத்திற்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்று தலைமை தீயணைப்பு அதிகாரி ஜஸ்வீர் சிங் கூறினார். 

தீ விபத்தில் பல கடைகள் எரிந்து சேதமாகி இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தை சம்பவ இடத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.