எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

ஆந்திரத்தில் 575 மாணவர்கள், 829 ஆசிரியர்களுக்கு கரோனா தொற்று

ஆந்திர மாநிலத்தில் இதுவரை 575 மாணவர்கள் மற்றும் 829 ஆசிரியர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image

கோப்புப்படம்

Updated On :6 நவம்பர் 2020, 5:35 am

ஆந்திர மாநிலத்தில் இதுவரை 575 மாணவர்கள் மற்றும் 829 ஆசிரியர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கரோனா பரவல் குறைந்துள்ள நிலையில், பள்ளி, கல்லூரிகள் ஒரு சில மாநிலங்களில் படிப்படியாகத் திறக்கப்பட்டு வருகின்றன. 

அந்த வகையில், ஆந்திரத்தில் கடந்த நவம்பர் 2 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. பள்ளிகள் தொடங்கி 4 நாள்களில் 575 மாணவர்களுக்கும் 829 ஆசிரியர்களுக்கும் கரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஆந்திர மாநில பள்ளிக்கல்வித்துறை அளித்துள்ள தகவலில், 1.89 லட்சம் அரசுப்பள்ளிஆசிரியர்களில்இதுவரை 70,790 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதில் 829 பேருக்கு தொற்று உறுதி ஆக்கியுள்ளது. அதிகபட்சமாக கிழக்கு கோதாவரி பகுதியில் 172 ஆசிரியர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணா மாவட்டத்தில் இருந்து ஆசிரியர் யாருக்கும் தொற்று உறுதியாகவில்லை. 

மாணவர்களைப் பொருத்தவரையில் 95,763 மாணவர்களுக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் 575 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதுகுறித்து பேசிய பள்ளிக் கல்வி ஆணையர் வி.சின்னவீரபத்ருது, 'கரோனா பாதிப்பு எண்ணிக்கையை கண்டு யாரும் பயப்பட வேண்டாம். பாதிக்கப்பட்ட மொத்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் விகிதம் 1 சதவீதத்திற்கும் குறைவே' என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.