லெபனானில் இஸ்ரேலியப்படைகளின் தாக்குதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,953 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள முக்கிய கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரான் படைகள் தாக்குதல் நடத்தி வந்தன. இந்தப் போரில், ஈரானுக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப்படையினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 2 ஆம் தேதி முதல் லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
ஈரான் மற்றும் இஸ்ரேல் - அமெரிக்கா இடையே நடைபெற்று வந்த போர் 2 வாரங்களுக்கு நிறுத்தப்படுவதாக கடந்த ஏப். 7 அன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
இருப்பினும் இந்த போர்நிறுத்தம் லெபனானுக்கு பொருந்தாது என்று கூறி லெபனான் மீது இஸ்ரேல் தனது தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது.
இதையடுத்து கடந்த மார்ச் 2 முதல் இதுவரை லெபனானில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,953 ஆக உயர்ந்துள்ளது. சுமார் 6,303 பேர் காயமடைந்துள்ளனர்.
ஏப்ரல் 7 ஆம் தேதி போர்நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகு ஏப். 8 மட்டும் நடந்த தாக்குதல்களில் 357 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், ஈரானின் போர்நிறுத்தம் லெபனானுக்குப் பொருந்தாது எனக் கூறியுள்ள நிலையில், ஈரான் மற்றும் மத்தியஸ்தம் செய்த பாகிஸ்தான், இந்த போர்நிறுத்தம் லெபனானுக்கும் பொருந்தும் எனக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வருகிற ஏப். 14 ஆம் தேதி இஸ்ரேல், லெபனான் இடையேயான போர் நிறுத்தம் குறித்து அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. இதற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
Summary
Death toll from Israeli attacks on Lebanon since March 2 rises to 1,953
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போர்நிறுத்தம்! டிரம்ப்பின் அறிவிப்பை மீறி லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்!

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்! இதுவரை 290 பெண்கள் உள்பட 2,198 பேர் பலி!

ஈரானின் போர்நிறுத்தம் இங்கு பொருந்தாது..! லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 182 பேர் பலி!

லெபனானின் குடியிருப்புப் பகுதியில் இஸ்ரேல் திடீர் தாக்குதல்! 12 பேர் பலி!
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

