கடந்த 5 நாள்களாக கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரை விட குணமடைவோர் விகிதம் அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. கரோனாவைக் கட்டுப்படுத்த பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரித்து தனிமைப்படுத்த வேண்டிய இடங்களைக் கண்டறிந்து தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.
எனினும் ஒரு சில மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இதனிடையே இது குறித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், நாட்டில் சராசரியாக கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 73 ஆயிரத்திலிருந்து 46 ஆயிரமாக குறைந்துள்ளது.
அக்டோபர் மாதத் துவக்கத்தில் 73 ஆயிரத்திற்கும் அதிகமாக பதிவாகி வந்த கரோனா பாதிப்பு தற்போது 46 ஆயிரத்தில் பதிவாகி வருகிறது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைவோருக்கும், சிகிச்சை பெற்று வருவோருக்குமான வித்தியாசம் 72,50,000 ஆக உள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு 77,65,966 பேர் குணமடைந்துள்ளனர். 5,20,773 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அமைச்சர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆசிய குத்துச்சண்டை: விஸ்வநாத் சுரேஷ் சாம்பியன்

ஆசிய பாட்மின்டன்: அரையிறுதியில் ஆயுஷ்

ஆசிய மல்யுத்தம்: மீனாட்சிக்கு வெள்ளி

மங்கோலியாவை முழுமையாக வென்றது இந்தியா
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

