இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

ஒடிசாவில் இன்றைய கரோனா பாதிப்பு 1,018 ஆக உயர்வு 

ஒடிசாவில் இன்று புதிதாக 1,018 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

News image

Odisha reports 1,018 new COVID-19 cases, 12 more fatalities

Updated On :13 நவம்பர் 2020, 7:14 am

PTI

ஒடிசாவில் இன்று புதிதாக 1,018 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் ஒடிசாவில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக ஒடிசா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,018 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,07,004-ஆக அதிகரித்துள்ளது. 

புதிதாகப் பாதிக்கப்பட்டதில், 585 பேர் தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலிருந்தும், மற்ற பாதிப்பு உள்ளூரிலும் கண்டறியப்பட்டுள்ளது. 

கரோனா தொற்றால் 11,715 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை தொற்று பாதித்துக் குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 2,93,741-ஆக அதிகரித்துள்ளது. 

புதிதாக 12 பேர் பலியானதால், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,495-ஆக அதிகரித்துள்ளது. 

ஒடிசா மாநிலத்தில் இதுவரை 51.71 லட்சம் கரோனா பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 48,246 சோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்று சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.