சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

ஏ.கே. அந்தோனி, மனைவி எலிசபெத் அந்தோனிக்கு கரோனா

​முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. அந்தோனி மற்றும் அவரது மனைவி எலிசபெத் அந்தோனிக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :18 நவம்பர் 2020, 12:53 pm


முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. அந்தோனி மற்றும் அவரது மனைவி எலிசபெத் அந்தோனிக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி அவரது மகன் அனில் கே அந்தோனி சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

"எனது தந்தை ஏ.கே. அந்தோனி மற்றும் தாய் எலிசபெத் அந்தோனி இருவருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவரும் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய உடல் நிலை சீராக உள்ளது. அவர்களுக்காக பிரார்த்தனை செய்யவும்."

மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியின்போது ஏ.கே. அந்தோனி மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.