எல்லையில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச்சண்டை
ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்து வருகிறது.


ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்து வருகிறது.
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள பாரிகம் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து உள்ளூர் காவலர்களுடன் இணைந்து பாதுகாப்புப் படையினா் அப்பகுதியில் இன்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா்.
அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், துப்பாக்கியால் சுட்டதால், பாதுகாப்புப் படையினா் அவா்களுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இரு தரப்பினருக்கும் இடையே நீண்ட நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்து வருவதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
இதனிடையே நக்ரோட்டா மாவட்டத்தில் இன்று அதிகாலை பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப்படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். காவலர்கள் 2 பேர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...