எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

ஜம்மு-காஷ்மீர்: பாகிஸ்தான் துப்பாக்கிச்சூட்டில் பெண் படுகாயம்

ஜம்மு-காஷ்மீர் கத்துவா மாவட்டத்தில் பாகிஸ்தான் வீரர்கள் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் படுகாயமடைந்தார். ஏராளமான வீடுகள் சேதமடைந்தன.

News image
ஜம்மு-காஷ்மீர்: பாகிஸ்தான் துப்பாக்கிச்சூட்டில் பெண் படுகாயம் (கோப்புப்படம்)
Updated On :19 நவம்பர் 2020, 9:47 am

DIN

ஜம்மு-காஷ்மீர் கத்துவா மாவட்டத்தில் பாகிஸ்தான் வீரர்கள் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் படுகாயமடைந்தார். ஏராளமான வீடுகள் சேதமடைந்தன.

ஜம்மு-காஷ்மீர் கத்துவா மாவட்டத்திலுள்ள ஹரிநகர் பகுதியில் பாகிஸ்தான் வீரர்கள் அத்துமீறி இல்லங்களைக் குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில் அப்பகுதியைச் சுற்றியுள்ள ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. பாகிஸ்தான் வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் வீட்டில் இருந்த மோட்டார் வெடித்து சிதறியதில் பெண் ஒருவர் படுகாயமடைந்தார்.

படுகாயமடைந்த பெண் கத்துவா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஜம்மு மருத்துவமனைக்கு  கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.