நிவர் புயல் எங்கே, எப்படி இருக்கிறது?
நிவர் புயல் எங்கே, எப்படி இருக்கிறது?

நிவர் புயல் எங்கே, எப்படி இருக்கிறது?

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகி, 25-ம் தேதி நள்ளிரவில் புதுச்சேரிக்கு அருகே கரையைக் கடந்த நிவர் புயலானது தொடர்ந்து வலுவிழந்து தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது.


சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகி, 25-ம் தேதி நள்ளிரவில் புதுச்சேரிக்கு அருகே கரையைக் கடந்த நிவர் புயலானது தொடர்ந்து வலுவிழந்து தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது.

அதி தீவிர புயலாக அறியப்பட்ட நிவர் புயலானது, தமிழகத்தின் வட உள் மாவட்டங்களைக் கடந்து, தற்போது வடக்கு - வடகிழக்காக தெற்கு ஆந்திரத்தை நோக்கி நகர்ந்து, குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுவிழந்துள்ளது. இது மேலும் வலுவிழந்து தென்கடலோர ஆந்திரப் பகுதி மற்றும் மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது.

இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் ஆந்திரத்தின் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிவர் புயல் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய வடகிழக்கு மாவட்டங்களில் கனமழை பெய்தது. அதிகபட்சமாக ராணிப்பேட்டையின்  சோளிங்கரில் 23 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

வங்கக் கடலில் புதிதாக உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம், புதுவையில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி பின்னர் புயலாக மாறவும் வாய்ப்பு உள்ளது என்றும் எஸ். பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com