ஆந்திரத்தில் நிவர் புயலில் பெய்த தொடர் கனமழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
ஆந்திரத்தில் நிவர் புயல் பாதிப்பு குறித்து சித்தூர், கடப்பா, நெல்லூர் ஆகிய மாவட்ட ஆட்சியர்களுடன் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆலோசனை மேற்கொண்டார்.
இதில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வது குறித்தும், மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
பின்னர், வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்றும், முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களின் அடிப்படை செலவுக்காக தலா ரூ.500 வழங்கப்படும் என்றும் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்தார்.
முன்னதாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நேரில் சென்று பார்வையிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஒரே சார்ஜிங்கில் 180 கி.மீ..! ரூ. 99,999-ல் ஓபன் ரோர் பைக்!

ஓய்விலிருந்து கிளாசனை வெளியே கொண்டு வாருங்கள்: கெவின் பீட்டர்சன்

தமிழக கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர், தேர்வுக் குழுவினர் பதவிக்கு ஆட்கள் தேவை!
ம.பி.: சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 16-ஆக உயர்வு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


