தெலங்கானாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,949 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தெலங்கானாவில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக தெலங்கானா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புதிதாக 1,949 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,99,276-ஆக அதிகரித்துள்ளது.
கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு 27,901 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா தொற்றிலிருந்து 1,70,212 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
சனிக்கிழமையான நேற்று மட்டும் 51,623 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தமாக 32,05,249 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
புதிதாக 10 பேர் உயிரிழந்ததால், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,163-ஆக அதிகரித்துள்ளது. இதனால் இறப்பு விகிதம் 0.58 சதவிகிதமாக உள்ளது. தேசிய அளவுடன் ஒப்பிடும்போது 1.6 சதவிகிதமாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ், தமிழ்நாடு என்றாலே பாஜகவுக்கு வெறுப்பு : மு.க. ஸ்டாலின்

தமிழகத்தில் 18,000 பாலியல் வழக்குகள் பதிவு: எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

காரைக்குடி தொகுதி ஒரு குடும்பத்தின் பிடியில் இருப்பதால் வளா்ச்சியில்லை: அண்ணாமலை யாரை சொல்கிறார்..?

அண்ணாமலை கூட்டணிக்காக முழு உழைப்பைக் கொடுக்கிறார்: எடப்பாடி பழனிசாமி
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு


