அசாமில் புதிதாக 756 பேருக்கு கரோனா: 14 பேர் பலி
அசாமில் இன்று புதிதாக 756 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,86,200 ஆக உயர்ந்துள்ளது.

Assam reports 756 new COVID-19 cases, 14 fresh fatalities

Assam reports 756 new COVID-19 cases, 14 fresh fatalities
அசாமில் இன்று புதிதாக 756 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,86,200 ஆக உயர்ந்துள்ளது.
ஜோர்ஹாட் மாவட்டத்தில் 3 பேரும், கம்ரூப் பெருநகர மற்றும் கோலாகாட்டில் தலா இரண்டு மற்றும் தேமாஜி, லக்கிம்பூர், டாரங், துப்ரி, மஜூலி, நாகான் மற்றும் திப்ருகார் ஆகிய இடங்களில் தலா ஒருவரும் என கடந்த 24 மணி நேரத்தில் 14 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து இறப்பு விகிதம் 0.40 ஆக உள்ளது.
ஒரேநாளில் நோய் பாதிக்கப்பட்ட 1,351 பேர் குணமடைந்த நிலையில், மொத்தம் 1,52,124 பேர் இந்த நோயால் குணமாகியுள்ளனர். தற்போது 33,324 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை மொத்தம் 36,38,290 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதில் கடந்த 24 மணி நேரத்தில் 13,123 சோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
அசாம் காவல்துறையில் இதுவரை 4,731 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவற்றில் 23 பேர் நோயால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...