பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

பாகிஸ்தானில் கரோனா இரண்டாம் அலைக்கு வாய்ப்பு: இம்ரான் கான்

பாகிஸ்தானில் கரோனா தொற்று நோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டியுள்ளது என்று அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். 

News image

COVID-19: Pak wary of second wave as winter approaches

Updated On :6 அக்டோபர் 2020, 7:22 am

PTI

பாகிஸ்தானில் கரோனா தொற்று நோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டியுள்ளது என்று அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். 

நாட்டில் கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் உயர்ந்து வருகின்றது. இந்த நிலையில், பாகிஸ்தானில் கரோனா பாதிப்பு கடந்த சில நாள்களாக அதிகரித்து வருகின்றது.

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், 

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 467 பேருக்குத் தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. தொற்று பாதித்த 3,15,727 பேரில் இதுவரை 3,00,616 பேர் முழுமையாகக் குணமடைந்துள்ளனர் என்று தேசிய சுகாதார சேவைகள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஒரே நாளில் குறைந்தது 6 பேர் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர். இதையடுத்து பலி எண்ணிக்கை 6,523 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 8,588 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். 

இதற்கிடையில், பஞ்சாபின் மிகப்பெரிய மாகாணத்தில் கரோனா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கை 1,00,000ஐ தாண்டியுள்ளது. 

தொற்று நோய் பாதிக்கப்பட்டதிலிருந்து மொத்தம் 3,70,2,607 சோதனைகளை மேற்கொண்டனர். இதில் கடந்த 24 மணி நேரத்தில் 28,280 பரிசோதனைகள் செய்துள்ளனர். 

கரோனா பரவுவதற்கு, முக்கிய காரணங்கள் திருமண மண்டபங்கள் மற்றும் உணவகங்கள் திறக்கப்பட்டதே என்று திட்டத்துறை அமைச்சர் அசாத் உமர் தெரிவித்தார். முன்னதாக, குளிர்காலத்தில் கரோனா நோய்த் தொற்று அதிகரிப்பதை எதிர்பார்க்கலாம் என்று பிரதமர் இம்ரான் கான் எச்சரித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.