பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

ஹிமாசலில் பாஜக எம்எல்ஏவுக்கு கரோனா

ஹிமாசல பிரதேசத்தின் பாஜக எம்எல்ஏ சுரேந்தர் சௌரி கரோனா வைரஸ் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளார். 

News image

HP BJP MLA tests positive for COVID-19

Updated On :7 அக்டோபர் 2020, 6:24 am

PTI

ஹிமாசல பிரதேசத்தின் பாஜக எம்எல்ஏ சுரேந்தர் சௌரி கரோனா வைரஸ் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளார். 

கடந்த அக்டோபர் 2-ம் தேதி அடல் சுரங்கப்பாதை திறந்து வைக்கப்பட்ட பின்னர் சோலாங்கில் பிரதமர் நரேந்திர மோடியின் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, சுரேந்தர் சௌரி கரோனா சோதனை செய்துள்ளார். அதில் அவருக்குத் தொற்று இருப்பது தெரியவந்தது. 

அதன்பின்னர், அவரும் அவரது ஊழியர்களும் உடனடியாக தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டனர். ஆனால் சிலர் தனது சோதனை முடிவை மறைத்ததாகத் தவறான தகவல்களைப் பரப்பினர். 

அவர் தான் வெளியிட்ட முகநூல் பதிவில், 

பிரதமரின் பாதுகாப்பிற்கு, சிறப்பு பாதுகாப்புக் குழுவின் வழிகாட்டுதலின்படி கரோனா பரிசோதித்ததாகவும், ஆனால் தனக்கு எந்த அறிகுறிகளும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.