முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!

முதல் 10 ஓவர்கள் திணறினாலும் சுதாரித்து விளையாடி வெற்றி பெற்றது...

Delhi Capitals' Sameer Rizvi bats during the Indian Premier League cricket match between Lucknow Super Giants and Delhi Capitals in Lucknow, India, Wednesday, April 1, 2026. (AP Photo/Manish Swarup)

தில்லி கேபிடல்ஸ் அணியில் சுதாரித்து விளையாடிய சமீர் ரிஸ்வி - AP

Published On :

ஐபிஎல் கிரிக்கெட் 2026 தொடரில் இன்றைய ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி பெற்றது.

லக்னௌ அணிக்கு எதிராக தில்லி கேபிடல்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்து சிறப்பாக பந்துவீசியது. லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 18.4 ஓவர்களில் 141 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தில்லி கேபிடல்ஸ் அணியில் தமிழக வீரர் நடராஜன், தென்னாப்பிரிக்க வீரர் லுங்கி இங்கிடி தலா 3 விக்கெட்களை சாய்த்தனர்.

அடுத்து, 142 ரன்கள் இலக்குடன் தில்லி கேபிடல்ஸ் பேட்டிங் செய்தது. அந்த அணியும் அடுத்தடுத்து விக்கெட்களைப் பறிகொடுத்து ரன் திரட்ட தடுமாறியதால் ஆட்டம் பரபரப்பாகச் சென்றது.

முதல் 10 ஓவர்கள் திணறினாலும் தில்லி கேபிடல்ஸ் அணியில் சுதாரித்து விளையாடிய சமீர் ரிஸ்வியும் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸும் அணியை வெற்றி பாதைக்கு இட்டுச் சென்றனர். 4 விக்கெட்களை இழந்து 17.1 ஓவர்களில் 145 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சமீர் ரிஸ்வி 47 பந்துகளில் 70 ரன்கள் (5 பௌண்டரிகள், 4 சிக்ஸர்கள்) குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்..

Summary

Delhi Capitals won by 6 wkts

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.