
தில்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளராகும் முன்னாள் இலங்கை வீரர்?
தில்லி கேபிடல்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தில்லி கேபிடல்ஸ் வீரர்கள் (கோப்புப் படம்) - படம் | ஐபிஎல்
தில்லி கேபிடல்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தில்லி கேபிடல்ஸ் அணி அடுத்தாண்டு ஐபிஎல் தொடருக்கு புதிய பயிற்சியாளர்கள் அடங்கிய குழுவுடன் களம் காண உள்ளது. தில்லி கேபிடல்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக யுவராஜ் சிங்கும், தலைமைப் பயிற்சியாளராக சௌரவ் கங்குலியும் நியமிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், வேகப் பந்துவீச்சு பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் சமிந்தா வாஸ் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியகியுள்ளது. இந்திய அணியின் முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா சுழற்பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இலங்கை அணியின் மிகவும் வெற்றிகரமான வேகப் பந்துவீச்சாளரான சமிந்தா வாஸ் டெஸ்ட்டில் 355 விக்கெட்டுகள் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 400 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 52 வயதாகும் அவர் ஐபிஎல் தொடரின் முதல் மூன்று சீசன்களில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு இடைவெளியில் இலங்கை அணியின் பயிற்சியாளர்கள் குழுவில் சமிந்தா வாஸ் இடம்பெற்றுள்ளார். வேகப் பந்துவீச்சு ஆலோசகராக செயல்பட்ட அனுபவமும் அவருக்கு உண்டு.
42 வயதாகும் அமித் மிஸ்ரா ஐபிஎல் தொடரில் தில்லி டேர்டெவில்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பரில் தொழில்முறை கிரிக்கெட்டிலிருந்து அமித் மிஸ்ரா ஓய்வு பெற்றார். இந்த நிலையில், அவர் தில்லி கேபிடல்ஸின் பயிற்சியாளர்கள் குழுவில் இணையவுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களில் தில்லி கேபிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஹேமங் பதானியும், பந்துவீச்சு பயிற்சியாளராக முனாஃப் படேலும் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
Summary
Reports indicate that a former fast bowler from the Sri Lankan team is set to be appointed as the bowling coach of the Delhi Capitals.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







