ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

பிகார் தேர்தலில் சிவசேனா 50 இடங்களில் போட்டியிட வாய்ப்பு

நடைபெற உள்ள பிகார் தேர்தலில் சிவசேனா கட்சி 50 இடங்களில் போட்டியிட வாய்ப்புள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ரெளத் தெரிவித்துள்ளார்.

News image
சஞ்சய் ரௌத்
Updated On :9 அக்டோபர் 2020, 9:27 am

DIN

நடைபெற உள்ள பிகார் தேர்தலில் சிவசேனா கட்சி 50 இடங்களில் போட்டியிட வாய்ப்புள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ரெளத் தெரிவித்துள்ளார்.

243 உறுப்பினர்களைக் கொண்ட பிகார் சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் நவம்பர் 29 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து, பிகார் சட்டப்பேரவைக்கு அக்டோபர் 28ல் தொடங்கும் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற உள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் சிவசேனா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ரெளத் எதிர்வரும் பிகார் சட்டமன்றத் தேர்தலில் சிவசேனா கட்சி 50 இடங்களிலிருந்து போட்டியிடலாம் என்றும், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் மாநில அமைச்சர் ஆதித்யா தாக்கரே ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள் என்றும் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

பிகாரில் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நவம்பர் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.