பிகாரில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரும், பாஜக தலைவருமான வினோத் சிங் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
50 வயதான வினோத் சிங், கடந்த சில நாள்களுக்கு முன்னர் மூச்சுத் திணறல் காரணமாகத் தில்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதன்பின்னர், கடந்த ஜூன் மாதம் இவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டு, பட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து கரோனா தொற்றிலிருந்து மீண்டார். இருப்பினும், அவர் முழுமையாகக் குணமடையவில்லை. அதன்பின் அவருக்கு மூளையில் ரத்தக் கசிவும் ஏற்பட்டது.
இதையடுத்து, மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சையளித்து வந்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிர் பிரிந்தது.
அவரது மறைவிற்கு பிகார் முதல்வர் நிதீஷ் குமார், துணை முதல்வர் சுஷில் குமார் மோடி, சுகாதார அமைச்சர் மங்கல் பாண்டே மற்றும் பிற தலைவர்கள் ஆழ்ந்த இறங்கலைத் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நாகப்பட்டினம் புதிய கடற்கரை மேம்படுத்தப்படுமா?

முதல் நாள் அறிவிப்பு; மறுநாளே ரத்து! பேசுபொருளாகும் விஜய்யின் பிரசாரம்!
இரட்டை இயக்குநர்களின் இயக்கத்தில்...
திரைக்கதிர்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


